நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து இன்றைய தினம் இரண்டாம் தவணைக்கான பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னாரில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் மாணவர்களின் புத்தகப்பை கடும் சோதனைகளுக்கு உற்படுத்தப்பட்டு மாணவர்கள் பாடசாலைகளுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பொலிஸார்,இராணுவம், பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கம் ஆகியவை இணைந்து தமது பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களின் புத்தகப்பை பரிசோதித்து,பாடசாலைக்குள் செல்ல அனுமதித்ததுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் பாடசாலைகளுக்கு சென்ற மாணவர்களின் வரவு மிக குறைவடைந்த நிலையில் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தரம்-06 முதல் உயர் தரம் வரையிலான மாணவர்களுக்கே இன்றைய தினம் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment