ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வரும் ரஜினிக்கு பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரல் கொடுக்கவுள்ளார்.
பேட்ட திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். முன்னணி இயக்குநர் ஏஆர் முருகதாஸ் முதல் முறையாக ரஜினிகாந்துடன் இணையும் படம் இது.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் ஆரம்பிக்கவுள்ளது.
0 comments:
Post a Comment