தொடருந்துடன் மோதுண்டு உயிரிழந்த நபரொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது.
யாழ்ப்பாணம் கோண்டாவில் தொடருந்து நிலையத்துக்கு அண்மையாகவே சடலம் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சுன்னாகத்தைச் சேர்ந்த எஸ்.சகாயநேசன் (வயது -43) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
இரவு நேரத் தொடருந்து வந்து கொண்டிருந்தபோது, தொடருந்து முன்பாக அவர் பாய்ந்து உயிரிழந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment