இலங்கையின் பல இடங்களில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்கள் குறித்து கண்டறிவதற்காக, நியமிக்கப்பட்ட குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை சட்டமா அதிபரிடம் பொறுப்பளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த குழுவின் முதலாவது அறிக்கை கடந்த வாரம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது அறிக்கை நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இரண்டாவது இடைக்கால அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கமைவாக எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அந்த அறிக்கை இன்று சட்டமா அதிபரிடம் பொறுப்பளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை ஒரு வாரத்தில் மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் குறித்து ஆராய உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் குறித்த குழு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment