தும்மலசூரியவில் பதற்றம் – காரணம் குறித்து பொலிஸார் விளக்கம்

தும்மலசூரிய நகருக்கு இனந்தெரியாத குழுவொன்று தாக்குதல் நடாத்த தயாராவதாக பரவிய வதந்தியொன்றையடுத்து, அப்பிரதேசத்தில் நேற்று (19) பதற்றம் நிலவியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால், அப்பிரதேசத்திற்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்த வேண்டி ஏற்பட்டதாக தும்மலசூரிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.
தும்மலசூரிய நகருக்க அருகிலுள்ள கரதாவில பாலத்துக்கு கீழ் இருந்து பயன்படுத்தப்பட்ட ரி.56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் 500 ரவைகள் இராணுவத்தினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த செய்தி பரவியதனாலேயே மேற்படி பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ரவைகள் நீண்ட நாட்களுக்கு முன்னர் இரும்புப் பொருட்கள் சேகரிப்பவர்களினால் எடுத்துவரப்பட்டுள்ளது. தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் தேடுதல் நடவடிக்கைக்குப் பயந்து இவற்றை பாலத்துக்குக் கீழால் போட்டு விட்டு சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த ரவைகள் மீட்கப்பட்டதன் பின்னர், கும்பல் ஒன்று தம்மைத் தாக்கப் போவதாக  பொய்யான செய்தி பரவியதனாலேயே அப்பிரதேசத்தில் பதற்றம் நிலவியதாகவும், இதனால், அப்பகுதிக்கு பொலிஸார், இராணுவம், இராணுவ கவச வாகனம் என்பன அனுப்பப்பட்டு அப்பகுதி மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment