நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலிருந்து மீள அவசரகால சட்டம் அவசியமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு அவசரகால சட்டம் ஜனநாயக ரீதியாக பாதிப்பினை ஏற்படுத்தும் பட்சத்தில் மாத்திரம் அதனை எதிர்க்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையினை கட்டுப்படுத்துவதற்காக அவசரகால சட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்ள அனைவருமே சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். கலவரங்களை அடக்குவதற்கு அவசரகால சட்டத்தின் தேவை அரசாங்கத்திற்கு அவசியமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவசரகால சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பது குறித்து நாடாளுமன்றில் தீர்மானிக்கப்படும் பட்சத்தில் அது கூட்டமைப்பில் தங்கியில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அவசரகாச சட்டம் தொடர்பான கொள்கை ரீதியான முடிவை தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் தீர்மானிக்குமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment