அவசரகால சட்டம் தளர்த்தப்படும் – மைத்திரி

ஒருமாத கலப்பகுதிக்கு பின்னர் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டம் தளர்த்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வெளிநாட்டு தூதுவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன அவர்களிடம் இந்த உறுதிப்பாட்டினை வழங்கியிருந்தார்.
பாதுகாப்பு துறையின் வெற்றிகரமான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோதிலும் மீண்டும் அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை ஏற்படாது என தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.
மேலும் இத்தகைய கொடூர தாக்குதல்கள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்வதற்கு பாதுகாப்புத் துறையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புதிய சட்டங்கள் வகுக்கப்படுவதுடன், நிறுவனக் கட்டமைப்பொன்றை தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகள் அதிகம் காணப்படுகின்றமையினால் இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு பல நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் தாக்குதலுக்கு பின்னர் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கையை தளர்த்துமாறும் ஜனாதிபதி தூதர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் நூற்றுக்கு 99 சதவீதம் இயல்பு நிலைக்கு திரும்பியிருப்பதாகவும் பாதுகாப்புத் துறையினரும் புலனாய்வுத் துறையினரும் மேற்கொண்ட வெற்றிகரமான நடவடிக்கைகளே இதற்குக் காரணமாகும் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் பாதுகாப்புத் துறையினருக்கு வெளிநாட்டு புலனாய்வுத் துறையினரிடமிருந்து கிடைக்கப்பெற்ற உதவிகளையும் பாராட்டினார்.
தாக்குதல் நடைபெற்று தற்போது ஒரு மாத காலம் நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த வாரம் இடம்பெற்ற வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பின்போதும் பயண எச்சரிக்கையை தளர்த்துமாறு பிரதமர் ரணில் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து, இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது நாட்டுக் குடிமக்களுக்கு சீனா விடுத்திருந்த பயண எச்சரிக்கையை சீன அரசாங்கம் தளர்த்தியுள்ளது. இந்த பயண எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக, சீன தூதரக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment