முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதை தானும் அனுமதிப்பதில்லை என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
எனினும் புர்கா அணிவதை சட்டத்தின் மூலம் தடை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் பெண்கள் தாமாக முன்வந்து புர்கா அணிவதை நிறுத்த வேண்டும் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
பொது சட்டம் அல்லது குறித்த ஒரு இனத்திற்கு மாத்திரம் வேறு சட்டத்தை அமுல்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை ஷரீஆ சட்டத்தை இலங்கையில் அமுல்படுத்துவதையும் தான் ஏற்றுக்கொள்வதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடல்களாலும் புரிந்துணர்வுகளாலுமே பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment