ஐடிசி நிறுவனம் சியோமி நிறுவனத்தின் விற்பனை விவரங்கள் குறித்த தகவலை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி மொத்தம் 2.5 கோடி ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்திருந்ததாக சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் (ஐடிசி) தகவல் வெளியிட்டுள்ளது.
விற்பனை அதிகரித்தாலும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது சியோமி 10.2% சரிவை சந்தித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தத் தகவலை முற்றிலுமாக மறுத்துள்ளார் சியோமி நிறுவனத் தலைவர் லெய் ஜூன்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சந்தை ஆய்வு நிறுவனங்களுக்கு எதிராக வெளியாகியிருக்கும் அறிக்கை விவரங்கள் சரியானதாக இல்லை.
அவை எங்களது ஸ்மார்ட்போன் விநியோகத்திற்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. 2019 முதல் காலாண்டில் எங்களது ஸ்மார்ட்போன் விற்பனை 2.75 கோடிகளை கடந்திருக்கிறது என லெய் ஜூன் தெரிவித்துள்ளார்.
கவுன்ட்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் 2018 ஆம் ஆண்டு உலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் சியோமி ரெட்மி 5ஏ இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment