அம்பலாந்தோட்டையில் இன்றைய தினம் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை முதல் நகரில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டு, வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
ரீதீகம அரச நிவர்தன இல்லத்திற்குப் பாகிஸ்தான் நாட்டு அகதிகள் சிலரைக் கொண்டுவருவதற்குத் தென் மாகாண ஆளுநர் முன்னெடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுவருகிறது.
அதேவேளை நேற்றைய தினமும் ரீதீகம பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment