பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரணி காட்டுப் பகுதியில் 03வயது மதிக்கத்தக்க யானை ஒன்று இறந்த நிலையில் நேற்று அதிகாலை மீட்கப்பட்டதாக, பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
பொது மக்கள் வழங்கிய தகவலையடுத்து, குறித்த இடத்திற்கு வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளுடன் சென்று இறந்த யானையை மீட்டதாகவும், குறித்த யானையின் உடம்பில் நாற்பட்ட காயங்கள் காணப்படுவதாகவும், மின்சாரம் தாக்கி குறித்த யானை இறந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment