யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் இராணுவம், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று அதிகாலை முதல் சுற்றி வளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையிலேயே இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பல்கலை வளாகத்திற்குள் தமிழீழ விடுதலை புலிகளின் புகைப்படங்கள் மற்றும் தொலைநோக்கி, இராணுவம் பயன்படுத்தும் சப்பாத்துக்கள் மீட்கப்பட்ட நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனா்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனா்.
0 comments:
Post a Comment