ரணில் விக்ரமசிங்க போன்றவர்களை பிரதமராக்கி தவறிழைத்து விட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கத்தின் கவனயீனமே நாட்டில் மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவதற்கு இடமளித்துள்ளது. அதற்கான பொறுப்பினை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
ரணில் விக்மசிங்க போன்றவர்களை பிரதமராக்கி நாம் தவறிழைத்து விட்டோம். கடந்த காலங்களில் புலனாய்வுத்துறை உட்பட முழு பாதுகாப்புத் துறையையும் பலவீனப்படுத்தும் செயற்பாடுகளையே அரசாங்கம் செய்துள்ளது.
அதன் பிரதிபலனையே தற்போது அனுபவிக்கின்றோம். இன்னும் ஆறுமாதங்களில் நாட்டை பாதுகாக்கின்ற – நேசிக்கின்ற புதிய தலைமைத்துவத்தினை நாம் கொண்டுவருவதே ஒரே தீர்வாக அமையும்” என குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment