சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாத கும்பல் 21/4 தககுதலுக்கு முன்னர் ஒன்றாக சேர்ந்து எடுத்த உறுதி மொழி அடங்கிய காணொளியை, ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்புக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படும் நபரை சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.
கடந்த 8 ஆம் திகதி மாத்தளை பகுதியில் வைத்து குறித்த நபரைக் கைது செய்துள்ள சி.ஐ.டி.பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அந் நபரிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
குறித்த நபர் கட்டாரிலிருந்து கடந்த ஏபரல் 15 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளதுடன், கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி காத்தான்குடி பகுதிக்கு சென்றுள்ளார்.
அதன் பின்னர் அவர் தாக்குதல்களைத் தொடர்ந்து அந்த காணொளியை ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்புக்கு வழங்கியுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்தே ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பு உரிமைக் கோரியுள்ளதாகவும் நம்பப்படுகின்றது.
0 comments:
Post a Comment