தமிழ் திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தும்படி கடந்த வாரம் தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி மரணமடைந்தார்.
விஜய்யின் பைரவா, அஜித்தின் வீரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரது படங்களை தயாரித்துள்ள இவர் இறக்கும் சமயத்திலும் விஜய்சேதுபதி நடித்து வருகின்ற சங்கத்தமிழன் படத்தை தயாரித்து வந்தார்.
ஆனால் இவரது இறுதி சடங்கிற்கு எந்தவொரு முன்னணி நடிகர்களும் கலந்து கொள்ளவில்லை என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இவ்வளவு ஏன் விஜய்சேதுபதியே லாபம் பட ஷூட்டிங்கிற்காக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு சென்னை திரும்பி 4 நாட்கள் ஆன நிலையில் இன்னமும் வெங்கட்ராம ரெட்டியின் குடும்பத்தை நேரில் சென்று சந்திக்கவில்லையாம்.
இந்த நிலையில் நமக்கு கிடைத்துள்ள தகவலின் விரைவில் தல அஜித் வெங்கட்ராம ரெட்டியின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறவுள்ளாராம். இதனை அஜித்தின் PRO சுரேஷ் சந்திராவே கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment