பொது மக்களிடம் இராணுவ தளபதி முக்கிய கோரிக்கை

எதிர்வரும் 21ம் திகதியின் பின்னர் மீண்டும் பாடசாலை, அலுவலகங்களுக்கு வழக்கம் போல சென்று அன்றாட பணிகளில் ஈடுபடுமாறு இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அச்சத்தின் பின்னர், நாட்டில் இயல்பான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அனைத்து மக்களுக்கும் வலுவான முறையில் பாதுகாப்பு வேலைத்திட்டத்துடன் இணைந்து கொள்ள வேண்டும். நாட்டில் அமைதியான சூழல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் வெசாக் கால பகுதியில் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். 20ம் திகதி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எதிர்வரும் 21ம் திகதியின் பின்னர் மீண்டும் பாடசாலைகளுக்கும் அலுவலகங்களுக்கும் சென்று அன்றாட செயற்பாடுகளை வழமையான முறையில் முன்னெடுக்கலாம். மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதில் பெற்றோருக்கு கூடுதலான பொறுப்புக்கள் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment