அனைவரையும் வாக்களிக்கச்சொல்லி கட்டளையிடும் தோனி மகள் ஜிவா தோனியின் காணொளி ஒன்று இணையத் தளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது நடைபெற்று வரும் போட்டிகளில் சென்னை சுப்பர்கிங் அணியின் கப்டன் தோனியின் மகள் ஸீவா தோனி அழகிய நடனமாடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது பஞ்சாப்.
தோனி களத்திலும், களத்துக்கு வெளியேவும் தனது மகளுடன் செய்யும் க்யூட் விஷயங்கள் வைரலாவது வழக்கம். இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடை பெற்று வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் பிரபலங்கள் ஆர்வமுடன் தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் தோனி ஸிவாவுடனான ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதில், ஜிவா தோனியின் மடியில் உட்கந்து, "அம்மா அப்பாவை போன்று நீங்களும் சென்று வாக்களியுங்கள்" என்று அழகாக கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவை, தோனி "உங்கள் சக்தியைப் பயன்படுத்துங்கள்" (Use your power) என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment