கிளிநொச்சி- பூநகரி, முட்கொம்பன் பிரதேசத்தில் உள்ளூர் துப்பாக்கிகள், ரவைகள் மற்றும் வாள்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பூநகரி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.குறித்த பிரதேசத்தில் பொலிஸாரும் படையினரும் இணைந்து திடீர் சோதனை நடவடிக்கையின் இன்று ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது அப்பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து துப்பாக்கிகள், ரவைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பல பொருட்களை அவர்கள் மீட்டுள்ளனர்.
பின்னர் அவ்வீட்டிலிருந்தவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் இந்த சுற்றிவளைப்பின்போது சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் மற்றும் மோட்டார் இலக்க தகடு ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment