ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஹற்றன் பகுதி நபர் ஒருவரின் வீட்டிலிருந்து 9 கத்திகள் பொலிஸாரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் வீட்டிலிருந்த அவரது சகோதரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர் இறுதியாக கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அவர் தற்போது ஜேர்மனில் வசித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, சந்தேகநபரின் ஹற்றன் – மல்லியப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டை ஹற்றன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.ஜெமில் தலைமையில் பொலிஸ் குழு சோதனை நடத்தியது.
அதன்படி, வீட்டின் களஞ்சிய அறையிலிருந்து இந்த கத்திகள் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சகோதரர் ஹற்றன் மாவட்ட நீதவான் ஜொக்சி முன்னிலையில் முற்படத்தப்பட்ட பின்னர் 20 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஹற்றன் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறும் சந்தேக நபருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment