அதர்வா-ஹன்சிகா இருவரும் இணைந்து நடித்துள்ள படம் 100. இந்தப்படம், வரும் மே 3 இல் வெளியாக இருந்தது. ஆனால், படம் வெளியீட்டுத் திகதி திடீரெனத் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஷாம் ஆண்டன், எழுதி இயக்கும் இந்தப் படத்தில், யோகிபாபு, ராதாரவி ஆகியோரும் நடித்துள்ளனர். அவுரா சினிமாஸ் தயாரிக்கும் இந்தப் படம், கடந்த ஆண்டு ஜூலை மாதமே முடிந்து விட்டது.
விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது, வரும் மே 9 இல் ரிலீஸ் செய்ய, படத் தயாரிப்புக் குழு திட்டமிட்டு, அதற்கான அறிவிப்பை வெளியிட்டு விட்டனர்.
படத்தை மிகப் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய சில ஏற்பாடுகளை செய்திருக்கிறோம்; அதற்காகவே, திகதியில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என தயாரிப்பாளர் தரப்பில், திகதி மாற்றத்துக்கான காரணத்தைக் கூறி இருக்கின்றனர். இருந்தாலும், பட ரீலீஸ் குறித்த குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, காவல் உதவிக்கு அழைக்கலாம். அப்படி, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவல்களை அங்கிருக்கும் காவலர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை வைத்து, கதைக் களம் அமைக்கப்பட்டிருக்கிறது.
0 comments:
Post a Comment