17ஆவது மக்களவை தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றிபெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க 8 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி பங்களாதேஷ், மியன்மார், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நாடுகளை தவிர ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவரான கிர்கிஸ்தான் நாட்டு ஜனாதிபதி சூரன்பே ஜீன்பெகோவ் மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரிவிந்த் ஜெகநாத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிம்ஸ்டெக் நாட்டு தலைவர்களிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், இந்த விழாவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment