இன்றைய நவீன உலகில் வீட்டுக்கே சென்று அவர்கள் கேட்கும் பொருள்களை கொடுப்பதில் பல முன்னணி நிறுவனங்கள் உள்ளது.
இந்தியாவிலும் இந்த இணையதள விற்பனை நிறுவனமாக அறியப்பட்ட அமேசானுக்குப் போட்டியாக உருவெடுத்துள்ளதுதான் ஃபிளிப்கார்டு நிறுவனம்.
இணையதள விற்பனை சேவை நிறுவனமான ஃபிளிப்கார்ட்(FLIPKARD) கம்பெனி கடந்த 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது பெங்களூரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் நிறுவனத்தில் 30 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்களாம்.
வாடிக்கையாளர்கள் நேரடியாக கடைக்குச் சென்று பொருள்கள் வாங்குவதால் விலை மிக அதிகமாக இருக்கும். அதுவே இணையதளத்தில் பொருள்களை ஆர்டர் செய்து வாங்கினால் விலை சற்று குறைவாக இருக்கும்.
இந்த நிலையில், தற்போது ஃபிளிப்கார்டு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 80% வரை குறிப்பிட்ட பொருள்களுக்கு சலுகை விலை விற்பனையை அறிவித்துள்ளது.
என்றுமில்லாத வகையில் தற்போது தங்களிடம் ஆர்டர் செய்து எடுக்கும் குறிப்பிட்ட பொருட்களுக்கு 80% கழிவை அறிவித்துள்ளது ஃபிளிப்கார்ட் நிறுவனம்.
0 comments:
Post a Comment