7 வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது

நாடாளுமன்றத்துக்கு 7–வது மற்றும் இறுதிக்கட்டமாக பீகார் (8), ஜார்கண்ட் (3), மத்தியபிரதேசம் (8), பஞ்சாப் (13), மேற்கு வங்காளம் (9), உத்தரபிரதேசம் (13), இமாசலபிரதேசம் (4), சண்டீகார் (1) என மொத்தம் 59 தொகுதிகளுக்கும் 19–ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் மேற்கு வங்காளம் நீங்கலான 8 மாநிலங்களில் உள்ள 50 தொகுதிகளிலும்  மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. 

மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா பேரணியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை தொடர்ந்து, ஒரு நாள் முன்னதாகவே பிரசாரத்தை முடித்துக்கொள்ளவேண்டும் என்று தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டதால், அங்கு 9 தொகுதிகளிலும் நேற்று இரவு 10 மணியுடன் பிரசாரம் முடிவுக்கு வந்தது.

4 தொகுதி இடைத்தேர்தல் 
 
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டசபையில் காலியாக உள்ள 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்காக இடைத்தேர்தல் கடந்த மாதம் 18–ந் தேதி நடைபெற்றது. மீதம் உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கும், நாடாளுமன்றத்துக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் வருகிற 19–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது. 

4 தொகுதிகளிலும் நடைபெற்ற அனல்பறக்கும் உச்சக்கட்ட பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.  மாலையில் பிரசாரம் நிறைவுபெற்றதும், தொகுதிகளில் தங்கி இருக்கும் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது. 19–ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

23–ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது, தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 22 சட்டசபை தொகுதிகளின் வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment