வெசாக் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் 762 கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்.
26 பெண் கைதிகளும், 736 ஆண் கைதிகளும் விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 117 கைதிகளும், பல்லேகல திறந்த சிறைச்சாலையிலுள்ள 62 கைதிகளும், மஹர சிறைச்சாலையிலுள்ள 55 கைதிகளும், அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள 50 கைதிகளும், பலன்சேன சிறை முகாமிலுள்ள 53 கைதிகளுமே விடுவி்க்கப்படவுள்ளனர்.
சிறைச்சாலைகள் வரலாற்றிலேயே அதிக கைதிகள் ஒரே தடவையில் விடுவிக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்று நீதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment