எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு 762 சிறைக் கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்படவுள்ளனர்.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த சிறைக் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்.
சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, பொது மன்னிப்பின் அடிப்படையில், நாட்டின் சிறைகளிலிருந்து 736 ஆண்களும், 26 பெண்களும் என மொத்தமாக 762 பேர் விடுவிக்கப்படவுள்ளனர்.
0 comments:
Post a Comment