விஜய் - அட்லி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படத்திற்கு தற்காலிகமாக தளபதி 63 என்று தலைப்பு வைத்துள்ளார்கள். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் படத்துக்கான பெயரை படக்குழுவினர் தேர்வு செய்துவிட்டதாகவும், விஜய் பிறந்தநாளையொட்டி ஜூன் 21-ந் தேதி படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் போஸ்டர் வெளியாக இருக்கிறது. அட்லி - விஜய் கூட்டணியில் உருவான தெறி, மெர்சல், சர்கார் படங்களின் தலைப்புகளும் இதே தேதியில் தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், தளபதி 63 படத்திற்கு வெறி, வெறித்தனம், மைக்கேல், கேப்டன் மைக்கேல் உள்ளிட்ட பெயர்களில் ஒன்றை தலைப்பாக அறிவிப்பார்கள் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் விஜய் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கிறார். விஜய் ஜோடியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், ஜாக்கி ஷெராப், இந்துஜா, ரெபா மானிகா, வர்ஷா பொல்லாமா, விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி, ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தீபாளவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment