கைவிடப்பட்ட நிலையிலிருந்த ரி-56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் மகசீன் மற்றும் தோட்டாக்கள் இன்று காலை மீட்கப்பட்டன.
வவுனியா மடுகந்த பகுதியில் குளத்துக்கு அருகில் பட்டம் ஏற்றுவதற்குச் சென்ற சிறுவன் ஒருவன் இந்த பொருள்களை அவதானித்தான்.
இதையடுத்துப் பொலிஸார் விஷேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கினர்.
சம்பவ இடத்துக்கு வந்ந்த விஷேட அதிரடிப்படையினர் மகசீன் மற்றும் தோட்டாக்களை மீட்டனர்.
0 comments:
Post a Comment