ஈரானில் இன்று மதியம் 2.58 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் அங்குள்ள கெர்மன்ஷனா நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் அதிர்ந்தன. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
கெர்மான்ஷா மாகாணம் மலைகள் சூழ்ந்த பகுதி. 2016ம் ஆண்டு நவம்பரில் இங்கு 7.3 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது கெர்மான்ஷா நகரமும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. 530 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தது நினைவிருக்கலாம்.
0 comments:
Post a Comment