ஆஸ்திரேலியாவில் 50 டாலர் நோட்டில் எழுத்துப்பிழை

ஆஸ்திரேலியாவில் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியான 50 டாலர் நோட்டுகள், எழுத்துப்பிழையுடன் அச்சிடப்பட்டுள்ளது.

ஆஸி.,யில் கடந்த ஆண்டு அக்., மாதத்தில், 2.3 பில்லியின் மதிப்பில், 46 மில்லியன் எண்ணிக்கையில் புதிய 50 டாலர் நோட்டுகள் வெளியாகின. இதில் அந்நாட்டு பார்லி.,யின் முதல் பெண் உறுப்பினர் எடித் கோவானின் முதல் உரை அச்சிடப்பட்டிருந்தது.

அதில், 'responsibility' என்ற வார்த்தைக்கு பதிலாக, 'responsibilty' என அச்சிடப்பட்டிருக்கிறது. இதனை ரேடியோ ஒன்றில் நேயர் தெரிவிக்க, பெரும் விவாதத்திற்கு உள்ளானது. எழுத்துப்பிழை உள்ளதை அந்நாட்டு ரிசர்வ் வங்கியும் உறுதிப்படுத்தி உள்ளது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment