ஏர்பஸ் விமான நிறுவனம் தனது 50 ஆவது ஆண்டு விழாவை விமான அணிவகுப்புடன் கொண்டாடியது.
ஐரோப்பிய நாட்டுக்குச் சொந்தமான ஏர்பஸ் நிறுவனம், இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் பிரான்ஸ் மற்றும் மேற்கு ஜெர்மன் அரசுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் 1969 ஆண்டு தொடங்கப்பட்டது
உலகின் வெற்றிகரமான விமான நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஏர்பஸ் துவங்கி 50 ஆண்டுகள் நிறைவடைவதையடுத்து அதனைக் கொண்டாடும் வகையில் பிரான்சின் துலூஸ் ((Toulouse)) பகுதியில் இருக்கும் இந்த நிறுவனத்தின் தலைமையகத்தில் சிறப்பு விமான அணிவகுப்பு நடைபெற்றது.
கடந்த சில ஆண்டுகளாக இந்த நிறுவனம் நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில் எளிமையான முறையில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
0 comments:
Post a Comment