சிறுமி ஒருவரின் வயிற்றிலிருந்து 500 கிராம் எடையுள்ள தலை முடிகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
ரஷ்யாவைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கே இவ்வாறு முடி அகற்றப்பட்டுள்ளது.
முடி உதிர்வுக்குச் சிகிச்சை பெறச் சென்ற சிறுமிக்கு, பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
ஒரு சோதனையில் அவருக்கு இரத்த சோகை நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட முழுமையான பரிசோதனையில், அவருடைய வயிற்றில் மர்ம பொருள் ஒன்று அடைத்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது.
சந்தேகமடைந்த மருத்துவர்கள் சிறுமியிடம் விசாரித்த போது, 10 வருடங்களாக அவர் தனது சொந்த முடியை சாப்பிட்டு வருவது தெரியவந்தது.
இதனையடுத்து சத்திரசிகிச்சை மூலம் தலைமுடி அகற்றப்பட்டது.
0 comments:
Post a Comment