மாத்தளை, வரகாமுர பிரதேசத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 5 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றிரவு (07) இரு குழுவினருக்கு இடையில் இடம்பெற்ற பதற்ற நிலைமையின் பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
விளம்பரப் பலகையொன்று தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதனால் இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தற்பொழுது நிலைமை சீரடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் கூறியுள்ளது.
0 comments:
Post a Comment