பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாநிலம் தலைநகரான குவெட்டாவில் உள்ள சாட்டிலைட் நகரில் உள்ள தொழுகைக்காக கூடியிருந்த மசூதி அருகே நேற்று இரவு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. குண்டுவெடிப்பில் சுற்றியிருந்த கடைகள், கட்டிடங்கள் சேதமடைந்தன.
இச்சம்பவத்தில் 4 போலீசார் உடல்சிதறி பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து ராணுவத்தினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயமடைந்தவர்களை மருத்துவ மனைக்குக் கொண்டுச் சென்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விசாரணையில், ரிமோட் மூலம் குண்டு வெடிக்கச் செய்துள்ளது தெரியவந்தது.
பலுசிஸ்தானில் கடந்த 3 நாட்களுக்கு முன் பயங்கரவாதிகள் நட்சத்திர ஓட்டலில் நுழைந்து தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment