கொழும்பு மெகஸின் சிறைச்சாலையில் திறந்த வெளியொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 44 கையடக்கத் தொலைபேசிகளை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவை மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
22 கையடக்கத் தொலைபேசிகள் வீதம் இரு பொதிகளில் போடப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
மகஸின் சிறைச்சாலையில் முன்னாள் எல்.ரி.ரி.ஈ. கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாட்டுக்கு அருகிலுள்ள நிலப்பரப்பிலேயே இந்த கையடக்கத் தொலைபேசிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த வாட்டில் முன்னாள் எல்.ரி.ரி.ஈ. கைதிகள் 102 பேர் தங்கியுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
0 comments:
Post a Comment