குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் 42 வயதுடைய செய்கு சியாப்தீன் மொஹமட் சாபி என்ற வைத்தியர் ஒருவர் நேற்றிரவு குருணாகல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வைத்தியரின் சொத்து விபரம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த வைத்தியர் சம்பந்தமாக குருணாகல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருணாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment