இலங்கையில் தஞ்சம் கோரிய பாகிஸ்தான் பிரஜைகள் 19 பேரும், ஆப்கானிஸ்தான் பிரஜைகள் 16 பேருமாக மொத்தம் 35 பேர் வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையமாக செயற்படும் கூட்டுறவுக் கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு நேற்று முன்தினம் முதல் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்துக்கு ஊடகங்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் குறித்த அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
0 comments:
Post a Comment