அமெரிக்காவின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில், ‘டல்லாஸ்’, ‘மிஷன் இம்பாசிபல்’, ‘ஹவாய் ஃபைவ் ஒ’ போன்ற புகழ்பெற்ற நிகழ்ச்சிகளின் டைரக்டராக பணிபுரிந்தவர் பெரி கிரானே(57) . இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அவரது வீட்டின் படுக்கையறையில் பிணமாக கிடந்துள்ளார். இதனை பெரியின் வீட்டிற்கு வழக்கம்போல பணிபுரிய வந்த வேலைக்காரர் பார்த்துள்ளார்.
இதனையடுத்து போலீசாருக்கு இச்சம்பவம் தொடர்பாக தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த அறிக்கையில் பெரி, பெரிய பீங்கான் பொருள் கொண்டு கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் நடந்த தினம் முதல் கடந்த மார்ச் மாதம் வரை கொலை செய்தவர் குறித்த தகவல் கிடைக்காமல் தனிப்பிரிவு போலீசார் திணறி வந்தனர். இந்நிலையில் பெரியின் பிரேத பரிசோதனை அறிக்கையை கடந்த ஆண்டு தனிப்பிரிவு காவல் அதிகாரிகள் மீண்டும் பரிசோதித்தனர். அப்போது பெரியை கொலை செய்த குற்றவாளி குறித்த விவரம் தெரிய வந்துள்ளது. 34 வருடங்களுக்கு பின்னர் , பெரியை கொலை செய்தவர் வடக்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த எட்வர்ட் கியாத்(52) ஆவார். பெரிக்கும், கியாத்துக்கும் இடையே இருந்த தனிப்பட்ட முன்விரோதமே கொலை செய்ததற்கு காரணம் என கூறியுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் கியாத்தை கைது செய்து கஸ்டடியில் வைத்துள்ளனர். மேலும் கியாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கியாத் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டால் ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment