பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக் கூட்டணி 335 தொகுதிகளை கைப்பற்றி முன்னிலை வகிக்கின்றது.
இதேவேளை, தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி முன்னிலை வகிக்கின்றது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் பெறுபேறுகள் இன்று காலையிலிருந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இந்தியா முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி முதல், இம்மாதம் 19ஆம் திகதி வரை 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் இரத்துச் செய்யப்பட்டது.
இந்தத் தேர்தலை பாரதீய ஜனதாக் கூட்டணி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும், காங்கிரஸ் கூட்டணி அதன் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலும் சந்தித்தன.
தபால் வாக்குகள் எண்ணிக்கை நடந்தது. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
பாரதீய ஜனதாக் கூட்டணி 335 இடங்களில் முன்னிலை வகிக்க, காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களை மட்டும் கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 36 இடங்களில் முன்னிலை வகிக்க, அ.தி.மு.க. இரண்டு இடங்களை மட்டும் கைப்பற்றியுள்ளது.
0 comments:
Post a Comment