சிறையில் ஏற்பட்ட கலவரத்தின்போது, 32 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தஜிகிஸ்தான் நாட்டில் உள்ள வாக்தாத் நகர் சிறைச்சாலையிலேயே இந்தக் கலவரம் நடந்துள்ளது.
குறித்த சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறு பின்னர் கலவரமாக மாற, கைதிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர்.
இதையடுத்து அங்கு வரவழைக்கப்பட்ட பாதுகாப்பு படையினர் கைதிகளை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் கைதிகள் கலவரத்தை கைவிடுவதாக இல்லை.
இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 29 சிறைக் கைதிகள் மற்றும் 3 பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சிறையில் கலவரம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும், மேலும் கலவரம் பரவாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment