மீஞ்சூர் அருகே உள்ள அனுப்பம்பட்டு சின்ன காலனியில் வசிக்கும் ரத்தினம் என்பவரின் மகன் கவிஅமுதன் (வயது 28).
கடந்த 3-ந் தேதி கவி அமுதன் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார். ஆனால், இரவு வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் சென்ற அவரை, இந்துஜா நகர் அருகே நாலூர்ஏரிக்கரை சாலையில் மர்ம கும்பல் வழிமறித்து கொலை செய்தது தெரிய வந்தது. கவிஅமுதனின் தலை, கழுத்து, கை ஆகிய இடங்களில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பொன்னேரி போலீஸ் உதவி சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் கொலையாளிகளை தேடி வந்தனர்.
விசாரணையில், கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதி இரவு நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, நடந்த தகராறில் வண்ணிப்பாக்கத்தை சேர்ந்த விஜி என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அமுதன் கைதாகி சிறைக்கு சென்றார். ஜாமீனில் வெளிவந்த அவரை, மீஞ்சூரை அடுத்த வண்ணிப்பாக்கத்தை சேர்ந்த மணி, அரிகிருஷ்ணன், மணிகண்டன் ஆகியோர் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் திட்டமிட்டனர்.
இந்த நிலையில், 3 பேரும் நேற்று மாலை எழும்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதையடுத்து, 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
0 comments:
Post a Comment