நடிகர் கமல்ஹாசனின் குறித்த அரசியல் சர்ச்சைகள் தான் தற்போது அதிகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அவருக்கு எதிர்ப்பும், கண்டனங்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து தமிழக மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
மற்றொரு பக்கம் அண்மையில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 புரமோ வெளியாகிவிட்டது. இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு எப்போது, போட்டியாளர்கள் யார் என தெரிந்து கொள்ள ரசிகர்களிடத்தில் ஆர்வம் அதிகமாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் கைவிட்டப்பட்டதாக தகவல் சுற்றிவந்தது, மேலும் இயக்குனர் சங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு என சொல்லப்பட்டு வந்தது.
தற்போது இயக்குனருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் பேச்சு வார்த்தை நடந்துள்ளதாம். அத்துடன் படத்திற்கு 2 வருடங்களை ஒதுக்கிக்கொடுத்திருக்கிறார்களாம். படத்தை 2021 ல் பொங்கலுக்கு ரிலிஸ் செய்யுங்கள் என கூறியுள்ளார்களாம்.
ஜுன் மாதத்தில் பிக்பாஸ் தொடங்குவதால், கமல்ஹாசனின் கால்ஷீட் கிடைக்கும் நேரங்களில் படப்பிடிப்பை நடத்தவும் பிளான் போட்டுள்ளார்களாம்.
0 comments:
Post a Comment