கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் கமல் - ஷங்கர் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18-ந் தேதி தொடங்கியது.
இப்படத்தில் கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், சித்தார்த் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அனிருத் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் நடந்த நிலையில் திடீரென்று நிறுத்தப்பட்டது. பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் பிசியானதால் நிறுத்தப்பட்டதாகவும் மேக்கப் சரியில்லாததால் நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
தேர்தல் முடிந்த பிறகும் படப்பிடிப்பு இன்னமும் துவங்கப்படவில்லை. படத்தை தயாரிக்க ஒப்பந்தமான லைகா புரொடக்ஷன்ஸ் பின்வாங்கியதால், படத்தை வேறு நிறுவனத்தை வைத்து தயாரிக்க பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
ரிலையன்ஸ நிறுவனம் அல்லது சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க வாயப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு இந்த மாத இறுதியிலோ அடுத்த மாத தொடக்கத்திலோ தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment