இயக்குனர் சற்குணம் தான் இயக்கிய முதல் படமான களவாணி படத்தின் 2ம் பாகத்தை தற்போது இயக்கி உள்ளார். முதல் பாகத்தில் நடித்த விமல், ஓவியா நடித்துள்ளனர். சற்குணமே படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் குமரன் மற்றும் சிங்காரவேலன் ஆகியோர் வழக்கு தொடர்ந்து, படத்துக்கு தடைபெற்றனர். பின்னர் இந்த தடை விலக்கப்பட்டது. இந்த நிலையில் படத்தை வெளியிட கூடாது என்று தன்னை சிங்காரவேலன், மிரட்டுவதாக சற்குணம் போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
நான் நடிகர் விமலை வைத்து களவாணி 2 படத்தை இயக்கி உள்ளேன். திரைப்படம் வெளியிட தயாராக இருந்த போது, குமரன் மற்றும் சிங்காரவேலன் ஆகியோர் திரைப்படத்தை வெளியிட கூடாது என்று நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திரைப்படத்தை வெளியிட தடை விதித்தது.
பின்னர் திரைப்படத்தின் இயக்குநரான நான் நீதிமன்றத்தில் படத்தை வெளியிட கோரி மனு தாக்கல் செய்திருந்தேன். அப்போது படத்திற்கு எந்த வித தொடர்பும் இல்லாத இவர்கள் என்னுடைய படத்தை தடைசெய்ய கோரியுள்ளனர். எனவே திரைப்படத்தின் மீதுள்ள தடையை நீக்க வேண்டும் என்று கூறினேன். அதன்படி நீதிமன்றம் இரு தரப்பு வாதங்களை விசாரித்து படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது.
இந்நிலையில் திரைப்படத்தை வெளியிட முயற்சி மேற்கொள்ளும் போது, மீண்டும் திரைப்படத்தை வெளியிட விடாமல் அடியாட்களை வைத்து குமரன் மற்றும் சிங்காரவேலன் ஆகியோர் மிரட்டி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், களவாணி 2 திரைப்படம் வெளியிட உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment