தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிருட் தோட்டத்திலுள்ள வீட்டுத் தொகுதியொன்று நேற்றிரவு (29) தீக்கிரையாகியுள்ளதாகவும், இதில் 24 வீடுகள் முற்றாக அழிந்துள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ, ஏனைய வீடுகளுக்கும் பரவியுள்ளதாகவும் தலவாக்கலை லிதுல நகர சபைத் தலைவர் அசோக சேபால தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் எவருக்கும் ஆபத்துக்கள் ஏற்பட வில்லையெனவும், 24 குடும்பத்தையும் சேர்ந்த 71 பேர் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
0 comments:
Post a Comment