உலகிலேயே குறைவான எடை கொண்ட குழந்தை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிறந்துள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மருத்துவனை ஒன்றில் வெறும் 245 கிராம் எடையுடன் இக் குழந்தை பிறந்துள்ளது.
பிறந்த போது ஆப்பிள் பழத்தின் எடையில் இருந்த இந்தப் பெண் குழந்தைதான் உலகிலேயே சிறிய குழந்தை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்ப்ப காலமான 40 வாரங்களில் 23 வாரங்கள் மட்டுமே தாயின் கர்ப்பப் பையில் இந்தக் குழந்தை இருந்தது.
பிறந்து ஒரு மணி நேரத்தில் குழுந்தை இறந்துவிடும் என்றும் மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் பலவீனமான நிலையில் பிறந்த இந்த குழந்தையின் உடல்நலம் தற்போது சீராகியுள்ளது.
தற்போது இந்தக் குழந்தை 2.2 கிலோகிராம் எடையுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment