2161 வெளிநாட்டு போதகர்கள், ஐ.எஸ். தொடர்புள்ளவர்களா?

இலங்கையில் காணப்படும் 1687 இஸ்லாமிய மத்ரஸா பாடசாலைகளில் பாட போதனைகள் நடாத்துவதற்கு முஸ்லிம் சமய விவகார திணைக்களம் மற்றும் அதன் அமைச்சு என்பவற்றின் அனுமதியின் கீழ் வெளிநாடுகளிலிருந்து இஸ்லாமிய போதகர்கள் 2161 பேர் இந்நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு வருகை தந்துள்ள சமய போதகர்கள் இடையே பயங்கரவாத ஐ.எஸ்.ஐ.எஸ். செயற்பாட்டாளர்கள் இருக்கின்றார்களா? என்பது குறித்து விசாரணைகள் இடம்பெறாதுள்ளதாக இன்றைய சகோதர வார இதழொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
தங்கியிருப்பதற்கான வீசாவுடன் வரும் இந்த இஸ்லாமிய போதகர்கள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் அவர்களது பின்னணிகள் குறித்து பாதுகாப்பு அறிக்கை கூட பெறாதுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இலங்கைக்கு வருகை தந்தவுடன் மத்ரஸா பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ள அம்பாறை, திருகோணமலை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் குருணாகலை ஆகிய பிரதேசங்களுக்கு சென்று விடுகின்றனர்.
இங்கு அவர்கள் என்ன செய்கின்றார்கள் என எந்தவித விசாரணைகளும் இடம்பெறாதுள்ளதாகவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் நான்கு பேர் தமது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த விரிவுரையாளர்களை இந்நாட்டுக்கு அழைத்துவர தலையிட்டுள்ளதாகவும் தகவல் வட்டாரங்களை ஆதாரம் காட்டி அதில் கூறப்பட்டுள்ளது. 

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment