சூர்யா நடித்துள்ள என்ஜிகே படம் வரும் மே-31 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இது செல்வராகவன் இயக்கியுள்ள படம் என்றாலும் படத்தின் டிரைலரை பார்க்கும்போது அவர் தனது பாணியில் இருந்து விலகி கேவி ஆனந்த், ஹரி போன்றவர்கள் பாணியில் கமர்சியலாக படம் இயக்கி உள்ளதைப் போன்றே தெரிகிறது. அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீசை வெகு விமரிசையாக கொண்டாட தயாராகி வருகிறார்கள் கேரளாவில் உள்ள சூர்யாவின் ரசிகர்கள். விஜய், அஜித்துக்கு அடுத்தப்படியாக கேரளாவில் சூர்யாவிற்கு ரசிகர்கள் அதிகமாகவே இருக்கின்றனர்.
அதனால் இந்த படத்தை கொண்டாடும் விதமாக இதுவரை இந்தியாவிலேயே எந்த நடிகருக்கும் வைக்காத விதமாக சுமார் 210 அடி உயரமுள்ள கட் அவுட்டை உருவாக்கி வருகிறார்கள். இதற்கு முன்பு அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு 190 அடி உயரத்தில் கட்-அவுட் வைக்கப்பட்டிருந்தது தான் சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment