நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர் பாதுகாப்பு தேவையை கருத்திற்கொண்டு அமெரிக்க வாழ் இலங்கையர்களால் ஆயுதங்களை கண்டறியும் 20 கருவிகள் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டு தாக்குதலின் காரணமாக நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
அத்தோடு நாட்டின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி போன்றவற்றிக்கு ஒத்துழைப்பை வழங்கும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்றவற்றில் சேவையாற்றும் சேவகர்களின் வரவானது குறைந்துள்ளது. மக்களின் வாழ்வாதாரமும் பின்னடைந்துள்ளது.
அதன் காரணமாக நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தி மக்களை இயல்பு நிலைக்கு திருப்புவதை நோக்காக் கொண்டு முப்படைகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்றோர் மிக அர்பணிப்புடன் அனைத்து பிரதேசங்களிற்கும் பாதுகாப்பை வழங்கி வருவதாக இராணுவ ஊடகப்பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க வாழ் இலங்கையர்களால் ஆயுதங்களை கண்டறியும் 20 கருவிகள் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment