நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் பைனலுக்கான பலப்பரிட்சை போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி விசாகபட்டினம் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி
ஸ்டேடியத்தில் இன்று இரவு 7. 30 மணிக்கு துவங்குகிறது.
இதில் வெற்றி பெறும் அணி வரும் 12ம் தேதி ஐதராபாத்தில் நடைபெறும் பைனலுக்கு தகுதி பெறும். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள்
பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் அணி, ஏற்கனவே தகுதி பெற்று விட்டது.
பைனலுக்கான 2வது அணி எது என்பதை முடிவு செய்யும் 2வது தகுதி சுற்றுப்போட்டி இன்று
விசாகபட்டினத்தில் நடைபெறுகிறது. இதில் டோனி தலைமையிலான அனுபவ வீரர்களை கொண்ட சென்னை சூப்பர் கிங்சை எதிர்த்து, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதுகிறது.
சென்னை அணியில் ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, டோனி, அம்பாதி ராயுடு, முரளி விஜய், டு பிளெசிஸ் என அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மென்கள் வரிசை கட்டுகின்றனர். டோனி, வாட்சன், ரெய்னா ஆகியோர் இக்கட்டான நேரங்களில்
முதிர்ச்சியுடன் ஆடி, அணியை சரிவில் இருந்து மீட்டு வருகின்றனர்.
கேப்டன் டோனி இந்த தொடரில் இதுவரை 10 போட்டிகளில் ஆடி 405 ரன்களை குவித்து, சென்னை வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். டெல்லி அணியில் அனுபவ
வீரர் ஷிகர் தவானுடன் இளம் வீரர்கள் ரிஷப் பன்ட், பிரித்வி ஷா, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், கோலின் மன்ரோ ஆகியோர் பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர். டெல்லி அணியில் ஷிகர் தவான் இத்தொடரில் இதுவரை 15 போட்டிகளில் ஆடி, 503
ரன்களை குவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment