யாழ்ப்பாணம் வடரமாட்சிப் பகுதியில், சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான அபின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
தொண்டமனாறு – கெருடாவில் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான இருவர் நடமாடியுள்ளனர்.
குறித்த இருவரும், பொலிஸார் வருவதைக் கண்டு பொதி ஒன்றைப் போட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
இதையடுத்து குறித்த பொதியை மீட்டெடுத்த பொலிஸார் அதிலிருந்து ஒன்றரைக் கிலோ கிராம் அபின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்
மீட்கப்பட்ட அபின் போதைப்பொருளின் பெறுமதி 2 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment